Tuesday 30 July 2013

குற்றாலம் சாரல் விழா: காய்கறி, பழக்கண்காட்சி எக்ஸ்குளூசிவ் படங்கள்!

சிறுவயதில் மட்டுமல்ல இப்போதும் கூட குற்றாலம் செல்வதென்றாலே சந்தோஷம் தானாக தொற்றிக் கொள்ளும். அதுவும் சில்லென்ற தண்ணீரில் நனைந்து ஆட்டம் போடும்போது இருக்கும் சந்தோஷம் இருக்கிறதே.... அதை வார்த்தைகளால் அளவிட முடியாது. மும்பெல்லாம் குற்றாலத்திற்கு போனால் அருவியில் குளிப்பது, குரங்குகளின் சேட்டைகளை ரசிப்பது, பார்க்கில் விளையாடுவது என்று ஒருசில என்ஜாய்மெண்ட்களே இருக்கும்.

ஆனால் இப்போது மக்களை மகிழ்விக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் காய்கறி மற்றும் பழக்கண்காட்சி. குற்றாலம் சாரல் திருவிழாவில் முதன்முறையாக காய்கறி மற்றும் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் முதன்முறையாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் கண்காட்சியில் காய்கறி மற்றும் பழங்களால் பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரட், வெள்ளரி, கத்தரிக்காய், வெண்டைகாய், பூசணி என பல்வேறு காய்கறிகளை பயன்படுத்தி மயில், கோழி, சேவல், டைனோசர் என தத்ரூபமாக காட்சிதரும் உருவங்கள் அரங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.  குறிப்பாக மாம்பழ டைனோசர் அனைவரையும் கவருகிறது. ஊதா நிற கத்தரிக்காய்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கரடி, மற்றும் அண்ணாச்சி பழங்களால் உருவாக்கப்பட்ட முதலை, சுரைக்காயில் உருவாக்கப்பட்ட மீன், பீட்ருட், கேரட்டால் உருவான ஒட்டகச்சிவிங்கி மற்றும் மலைப்பாம்பு, கத்தரிக்காயை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பென்குயின், பச்சை மிளகாயில் செய்யப்பட்ட கோழி, இது தவிர குரங்கு, மலைப்பாம்பு, மயில், முதலை, ஆமை, டயனோசரஸ், வாத்து, சேவல், கோழி, கிளிகள், கொக்கு, மலர்ச்செடிகள் போன்ற உருவங்களை காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இதேபோல மலர் கண்காட்சியும் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கம் மலர்களை பார்க்கும்போதே பலருக்கும் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கும். இங்கு எண்ணிலடங்கா மலர்களை வைத்துள்ளார்கள். ஒவ்வொரு பூக்களையும் கடந்துபோகும்போது மகிழ்ச்சி ஒருபுறமிருப்பினும், அந்த மலர்களை விட்டு விலகப்போகும் வருத்தமும் நெஞ்சத்தில் குடி கொள்கிறது.

இந்த கண்காட்சி நாளை வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது. நேரில் பார்த்து ரசிக்க விரும்புவோர் குற்றாலத்திற்கு புறப்படுங்கள். நேரில் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுபவர்கள்... கவலையை விட்டு விட்டு இங்கே நான் பதிவு செய்திருக்கும் படங்களை சுட்டி, ரசித்து பார்த்து மகிழுங்கள்.












Sunday 28 July 2013

திருமணமானவர்கள் ­இதை படிக்க வேண்டாம்!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

# இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்.


Source : FACE BOOK