Tuesday 18 June 2013

காவல்துறை அலட்சியத்தால் பள்ளி குழந்தைகள் 9 பேர் பலி!

போக்குவரத்து காவல்துறையின் அலட்சியத்தால் இன்று (19.07.2013) 9.30 மணிக்கு புதுக்கோட்டையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மீதிகுழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசை பிடித்த பல ஆட்டோக்காரர்கள், ஆம்னிகாரர்கள் வருமானத்திற்காக அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். விதிகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் இவர்களை கண்காணிக்க வேண்டிய காவல்துறையோ விபத்து நேரும்போது தான் சும்மா ஒரு மாசத்துக்கு ஒழுங்கா கண்காணிக்கறார்கள். அரசும் விபத்து சமயத்தில் மட்டுமே கடுமையான விதிகளை பிறப்பிக்குது.பேருந்து ஓட்டுனர்களுக்கு கூட காலை நேரமாச்சே பள்ளி மாணவர்களின் வாகனங்கள் செல்லுமே நிதானமா பஸ்சை இயக்கனும்ங்கற அறிவு இருக்க மாட்டேங்குது..

போக்குவரத்து அதிகாரிகள் சரியாக கண்காணித்து விதிகளை கடுமைப்படுத்தி பள்ளி வாகனங்களையும், தனியார் பள்ளி வாகவங்களையும் ஒழுங்குப்படுத்தினால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாமே! செய்வார்களா?

No comments:

Post a Comment